crowd catch on a motorbike x
கிரிக்கெட்

கிரவுண்ட்டை விட்டு பறந்துசென்ற பந்து.. பைக்கில் சென்றவர் பிடித்த அசாத்திய கேட்ச்! #Viral

சமூக வலைதளத்தில் வைரலாகும் கிரிக்கெட் வீடியோ ஒன்றில், கிரவுண்டை விட்டு பறந்துசென்ற பந்தை சாலையில் பைக்கில் சென்ற ஒருவர் கேட்ச் பிடித்தது கவனம்பெற்றது.

Rishan Vengai

பாகிஸ்தானில் நடந்த கிரிக்கெட் போட்டியில், சிக்சராக பறந்த பந்தை மோட்டார் சைக்கிளில் சென்றவர் ஒற்றைக் கையால் பிடித்த அபாரமான கேட்ச், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் விளையாட்டில் எப்போதும் சில சுவாரசியமான சம்பவங்கள் நடைபெறும். அவை போட்டியை கடந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமையும். அப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

பாகிஸ்தானின் மிங்கோராவில் உள்ள கிராஸி கிரவுண்டில் நடைபெற்ற ஸ்வாட் பிரீமியர் லீக் சீசன் 8 போட்டியில் ஜிகேஆர் டைர் மற்றும் ஸ்வாட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. அந்தப்போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் வீசிய பந்தை பேட்ஸ்மேன் கிரவுண்ட்டை விட்டு வெளியே தூக்கி அடிக்கிறார், அப்போது மைதானத்திற்கு வெளியே சிக்சராக பறந்து சென்ற அந்த பந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஒற்றைக் கையால் அபாரமான கேட்ச்சை பிடித்தார். இந்தக்காணொளி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.