ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட் X
கிரிக்கெட்

”THE WALL" | 5 இரட்டை சதம்! 210 கேட்ச்! முதல் இந்திய வீரராக டிராவிட் படைத்த 6 இமாலய சாதனைகள்!

Rishan Vengai

டெஸ்ட்டில் 5 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் ராகுல் டிராவிட்டுக்கும் இடையேயான காதல்கதை என்பது எல்லோரும் விரும்பக்கூடியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருடைய பேட்டிங் உங்களுக்கு முதலில் நியாபகம் வரும் என்று கேட்டால், இந்திய ரசிகர்களின் அனைவருடைய பதிலும் ராகுல் டிராவிட் என்று தான் இருக்கும். அந்தளவு ஒரு சிறந்த டெஸ்ட் வீரராக ஜொலித்த ராகுல் டிராவிட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்களை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.

dravid

டெஸ்ட்டில் 5 இரட்டை சதங்களை பதிவுசெய்த முதல் இந்திய வீரர் ராகுல் டிராவிட் ஆவார். 5 இரட்டை சதங்கள் முதலே ஜிம்பாப்வே உடன் 200* நாட் அவுட், இங்கிலாந்துடன் 217, நியூசிலாந்துடன் 222, ஆஸ்திரேலியாவுடன் 233, பாகிஸ்தான் உடன் 270 ஆகியவையாகும்.

டெஸ்ட் விளையாடும் ஒவ்வொரு நாட்டிற்கும் எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர்!

dravid

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை என டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாட்டு அணிக்கு எதிராகவும் சமடித்த முதல் இந்திய வீரர் ராகுல் டிராவிட் ஆவார். சச்சின் டெண்டுல்கருக்கு முன்னதாகவே இதை செய்தவர் ராகுல் டிராவிட்.

தொடர்ச்சியாக 4 டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்!

dravid

தொடர்ச்சியாக நான்கு இன்னிங்ஸ்களில் டெஸ்ட் சதம் அடித்த மூன்று பேட்ஸ்மேன்களில் ராகுல் டிராவிட்டும் ஒருவர். 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு போட்டியிலும் என 115, 148, 217 மற்றும் 100* ரன்கள் எடுத்ததன் மூலம் டிராவிட் இந்த சாதனையை தன்வசமாக்கினார்.

தொடர்ச்சியாக 7 டெஸ்ட்டில் அரைசதங்கள் அடித்த வீரர்!

dravid

டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரரான ராகுல் டிராவிட், 2006ம் ஆண்டு தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் அடித்து அசத்தினர். இது ஒரு இந்திய பேட்ஸ்மேனுக்காக தொடர்ச்சியாக 6 டெஸ்ட்களில் 50+ ஸ்கோர்கள் அடித்த முந்தைய 5 இந்திய வீரர்களின் சாதனையை முறியடித்தது. டிராவிட்டுக்கு அடுத்த நிலையில் விஜய் ஹசாரே, சந்து போர்டே, சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்க்கார் மற்றும் சடகோப்பன் ரமேஷ் ஆகியோர் 6 முறை பதிவுசெய்துள்ளனர்.

ODI-களில் இரண்டுமுறை 300 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ஒரே வீரர்!

1999 உலக்ககோப்பையில் ப்ரைம் ஃபார்மில் ஜொலித்த ராகுல் டிராவிட், இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் கங்குலியுடன் இணைந்து 318 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து 333 ரன்களும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டுகளில் இதை இரண்டு முறை செய்த ஒரே இந்திய வீரர் மற்றும் ஒரே உலக வீரர் ராகுல் டிராவிட் மட்டும் தான். அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக சிகப்பு மற்றும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 6 முறை 300 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ஒரே வீரரும் ராகுல் தான்.

210 டெஸ்ட் கேட்ச்கள்!

dravid

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த ஒரே வீரராக 210 கேட்சுகளுடன் முதலிடத்தில் உள்ளார் டிராவிட். அவருக்கு அடுத்த இடத்தில் 205 கேட்சுகளுடன் மஹிலா ஜெயவர்த்தனேவும், 200 கேட்சுகளுடன் ஜாக் காலிஸ்ஸும் உள்ளனர்.