ENG vs IND test series cricinfo
கிரிக்கெட்

21 சதங்கள்.. 50 அரைசதங்கள்.. 7000 ரன்கள்.. ஒரு தொடரில் இத்தனை உலக சாதனைகளா?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பல உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. பல தசாப்தங்களாக முறியடிக்கப்படாத சாதனை உடைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே தெரிந்து கொள்ளலாம்..

Rishan Vengai

21 சதங்கள்

முதல் ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சேர்ந்து 21 சதங்களை பதிவுசெய்து உலக சாதனையை சமன்செய்துள்ளனர்.

1955-ல் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 21 சதங்கள் அடிக்கப்பட்ட நிலையில் 70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உலக சாதனை சமன்செய்யப்பட்டுள்ளது.

சுப்மன் கில்

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக தனிநபர் சதங்கள்:

1955 - மேற்கிந்திய தீவுகளில் ஆஸ்திரேலியா - 21 சதங்கள்

2025 - இங்கிலாந்தில் இந்தியா - 21 சதங்கள்

2003/04 - தென்னாப்பிரிக்காவில் மேற்கிந்திய தீவுகள் - 20 சதங்கள்

50 அரைசதங்கள்

5 போட்டிகள் கொண்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 50 தனிநபர் அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு சர்வதேச டெஸ்ட் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச அரைசதங்களின் எண்ணிக்கையாகும்.

இது 1993-ல் நடைபெற்ற ஆஷஷ் தொடரில் அடிக்கப்பட்ட உலக சாதனையை சமன்செய்தது.

ஜடேஜா

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக தனிநபர் 50+ ரன்கள்:

1993 - ஆஷஸ் டெஸ்ட் தொடர் - 50 அரைசதங்கள்

2025 - இங்கிலாந்தில் இந்தியா - 50 அரைசதங்கள்

1920/21 - ஆஷஸ் தொடர் - 49 அரைசதங்கள்

அதிகமுறை 300+ ஸ்கோர்கள்

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 14 முறை 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. இது 1928-ல் அடிக்கப்பட்ட அதிகபட்ச உலகசாதனையை சமன்செய்தது.

இந்தியா - இங்கிலாந்து

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக 300+ ரன்கள்:

1928/29 - ஆஷஸ் தொடர் - 14முறை

2025 - இங்கிலாந்தில் இந்தியா - 14 முறை

1975 - ஆஸ்திரேலியாவில் மேற்கிந்திய தீவுகள் - 13 முறை

7000 ரன்கள்

root - brook

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரில் 7000 ரன்கள் அடிக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 6 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 1993 ஆஷஸ் தொடரில் மட்டுமே 7221 ரன்கள் அடிக்கப்பட்டது.

ஹோம் டெஸ்ட்டில் அதிக சதங்கள்

சொந்த மண்ணில் 24 சதங்களை பதிவுசெய்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய உலக சாதனையை படைத்தார். இதற்கு முன்பு ஹோம் டெஸ்ட்டில் 23 சதங்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்த நிலையில், அதனை முறியடித்தார் ஜோ ரூட்.

ஜோ ரூட்

இதற்கு முன்பு சொந்த மண்ணில் 23 டெஸ்ட் சதங்கள் அடித்து ரிக்கி பாண்டிங், ஜாக் காலீஸ் மற்றும் ஜெயவர்த்தனே முதலிடத்தில் இருந்தனர்.