பதிரானாவை விலைக்கு வாங்க போட்டியிடும் 5 ஐபிஎல் அணிகள் web
கிரிக்கெட்

’இனி வாய்ப்பே இல்லை..’ CSK செய்த மிகப்பெரிய தவறு.. பதிரானா-க்கு போட்டிப்போடும் 5 அணிகள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிரானாவை வெளியிட முயற்சி செய்வது தெரிந்தபோதே 3 அணிகள் வர்த்தகம் மூலம் விலைக்கு வாங்க முயர்சித்ததாகவும், அதனை சென்னை அணி மறுத்துவிட்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன..

Rishan Vengai

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட மதீசா பதிரானாவை விலைக்கு வாங்க 5 ஐபிஎல் அணிகள் போட்டியிடுகின்றன..

2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை வெளியிட்டதே சென்னை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்த நிலையில், அணி எப்போதெல்லாம் ஆபத்தான நிலையில் இருக்கிறதோ அப்போதெல்லாம் ஆபத்பாந்தவனாக காப்பாற்றிய மதீசா பதிரானாவையும் வெளியேற்றி ஷாக் கொடுத்துள்ளது சிஎஸ்கே..

Ravindra Jadeja

இதில் குழப்பான விசயம் என்னவென்றால், பதிரானாவை சிஎஸ்கே வெளியேற்ற முடிவுசெய்ததை அறிந்துகொண்ட மற்ற அணிகள் வர்த்தகம் மூலம் விலைக்கு வாங்க முயன்றபோதும் சென்னை அணி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.. அவர்கள் வர்த்தகம் செய்யவிரும்பாமல் ஏலத்தில் குறைந்த விலையில் மீண்டும் அணிக்குள் கொண்டுவரும் முயற்சியில் வெளியேற்றியிருப்பது தெரிகிறது..

பதிரானா

ஆனால் துரதிருஷ்டவசமாக மற்ற 5 ஐபிஎல் அணிகள் பதிரானாவிற்காக போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.. இதன்மூலம் ஜடேஜா, சாம்கரன் போன்ற ஆல்ரவுண்டர்கள் இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சென்னை அணிக்கு பதிரானா மீண்டும் கிடைப்பது முடியாத காரியமாகவே இருக்கப்போகிறது..

பதிரானாவை எப்படி கண்டுபிடித்தது சிஎஸ்கே?

22 வயதாகும் மதீசா பதிரானா அதற்குள்ளாகவே ஒரு முக்கிய வீரராக உயர்ந்துள்ளார்.. மதீசா பதிரானா பவுலிங் போடும் வீடியோவை பார்த்த சிஎஸ்கே ஸ்கவுட்டிங் டீம், 2020-ம் ஆண்டு அவரை சிஎஸ்கே அணிக்கு நெட் பவுலராக அழைத்தது.. ஆனால் அப்போது பள்ளியிலிருந்து அனுமதி கிடைக்காததை அடுத்து அவரால் சிஎஸ்கேவின் அழைப்பை ஏற்க முடியவில்லை..

அதற்கு பிறகு ஒரு வருடம் கழித்து 2021-ம் ஆண்டும் சிஎஸ்கே மீண்டும் அவரை அணியில் கொண்டுவர முயற்சி செய்தது.. அப்போது இலங்கையின் யு19 அணிக்காக மீண்டும் அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது..

பதிரானா

இந்தசூழலில் காயமடைந்த ஆடம் மில்னேவுக்கு மாற்றாக 2022-ஆம் ஆண்டில் சிஎஸ்கே அவரை ஒருவழியாக அணியில் சேர்த்தது. அப்போது சென்னை அணியின் நம்பிக்கையை மீட்டெடுத்த பதிரானா, தோனியின் கேப்டன்சியின் கீழ் சிஎஸ்கே அணியின் அஸ்திரமாகவும், டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்டாகவும் மாறினார்..

2023 ஐபிஎல் கோப்பை வென்ற சிஎஸ்கே அணியில் முக்கிய வீரராக இருந்த பதிரானா, சென்னை அணிக்காக நான்கு சீசன்களில் வெறும் 32 போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்..

பதிரானாவுக்காக 5 அணிகள் போட்டி..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு துறையின் முக்கிய வீரராக இருந்த பதிரானா சிஎஸ்கே அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டுள்ள நிலையில், 5 அணிகள் அவரை அணியில் எடுக்க போட்டிப்போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது..

முதலில் சென்னை அணியிடமிருந்து வர்த்தகம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜடேஜா உடன் சேர்த்து சாம்கரனுக்கு பதிலாக பதிரானாவை தான் கேட்டுள்ளது.. ஆனால் அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மறுப்பு தெரிவித்து ஆஃபரை கேன்சல் செய்துள்ளது..

pathirana

பதிரானாவை வெளியேற்றும் எண்ணத்தில் சிஎஸ்கே அணி இருப்பதை தெரிந்துகொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, மார்கஸ் ஸ்டொய்னிஸ்க்கு பதிலாக பதிரானாவை கேட்டுள்ளது.. ஆனால் அதற்கும் சென்னை அணி மறுத்துள்ளது..

இந்தசூழலில் வந்த அனைத்து வாய்ப்புகளையும் மறுத்தபிறகும் ஏன் சென்னை அணி வெளியேற்றியது என்ற கேள்விக்கு, 13 கோடியுடன் இருக்கும் பதிரானாவை வெளியேற்றி குறைந்த விலைக்கு வாங்குவதே சென்னை அணியின் திட்டமாக இருப்பது தெரிகிறது.. ஆனால் சென்னை அணியின் இந்தமுடிவு நிச்சயம் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது..

பதிரானா - பிராவோ

மிகப்பெரிய பர்ஸ் தொகையுடன் இருக்கும் கொல்கத்தா அணி பதிரானாவுடன் உடனடியாக ஆஃபர் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதேபோல டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற வீரர்களும் பதிரானாவிற்காக போட்டிப்போடுவதாக அறிக்கைகள் கூறுகின்றன..

ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி பதிரானாவை அணிக்கும் எடுத்துவருவது கிட்டத்தட்ட முடியாத விசயமாக இருக்கப்போகிறது..

கேகேஆர் ரூ.64.3 கோடி, சிஎஸ்கே ரூ.43.4 கோடி, லக்னோ ரூ.22.95 கோடி, டெல்லி கேபிடல்ஸ் ரூ.21.8 கோடி, ராஜஸ்தான் ஒரு ஓவர்சீஸ் ஸ்லாட் உடன் ரூ.16 கோடி கையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..