Rohit Sharma
Rohit Sharma Insta
கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை எரித்த ரோகித் ரசிகர்கள்! UNFollow செய்த 4.5 லட்சம் Fans!

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே வீரர்களின் வர்த்தகமானது சூடுபிடிக்கத்தொடங்கியது. ஒவ்வொரு அணிகளும் அவர்களுக்கு தேவையான வீரர்களுக்கு போட்டிப்போட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் அடுத்த கேப்டனுக்கான போட்டியில் இறங்கியது.

யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ரூ15 கோடி விலை கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளையும் ஆட்டம் காண வைத்தது.

Rohit Sharma

ஆனால் "எதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை இவ்வளவு விலை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்க வேண்டும்? இதனால் தற்போது கேப்டனாக இருந்துவரும் ரோகித்தின் நிலை என்னாகும்? ஒருவேளை 2025 ஐபிஎல் தொடருக்கான கேப்டனுக்காக ஹர்திக்கை கொண்டுவந்துள்ளதா? ரோகித்திற்கு இதுதான் கேப்டனாக கடைசி ஐபிஎல் தொடரா?" என பல்வேறு குழப்பம் ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.

Hardik Pandya

ஹர்திக் வருகையை ரோகித் சர்மா ரசிகர்கள் வரவேற்றாலும், ரோகித் சர்மாவே கேப்டனாக இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஐபிஎல் தொடரிலாவது விளையாட வேண்டும் என்ற ஆசையில் இருந்தனர். ஆனால் ரோகித் சர்மா ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆசையையும் நிராசையாக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, எதிர்ப்பார்த்ததைபோலவே ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரோகித் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். நேற்று ஆரம்பித்த விரக்தி இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை சமூக வலைதளங்களில் பின் தொடர்வதை நிறுத்துவது என தொடங்கி, தற்போது மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை எரிக்கும் அளவிற்கு சென்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை எரித்த ரோகித் ரசிகர்கள்!

சமூக வலைதளங்களில் தொடர்ந்து விரக்தியையும், மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாட்டை கண்டித்தும் பதிவுகளை பகிர்ந்துவரும் ரோகித் ரசிகர்கள், X தளத்தில் #ShameonMI, #SackedRohit, #Bumrah, #Pandya, #RIPMumbaiIndians முதலிய ஹாஸ்டாக்குகளை டிரெண்டிங்கில் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ரோகித்தை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாத சில ரோகித் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை தீயிட்டு எரிக்கும் வீடியோக்களையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

4.5 லட்சம் ரசிகர்களை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பதிவுகளை பகிர்வது மட்டுமில்லாமல், பெரும்பாலான ரோகித் சர்மா ரசிகர்கள் மும்பை அணியின் கேப்டன்சி முடிவை ஏற்றுக்கொள்ளாமல் சமூக வலைதங்களில் MI அணியின் பக்கங்களை அன்ஃபால்லோவ் செய்து வருகின்றனர்.

Rohit Sharma

இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 13.2 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருந்த நிலையில், தற்போது 12.7 மில்லியன் பின் தொடர்பவர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதேபோல எக்ஸ் தளத்திலும் அன்ஃபோல்லோவ் செய்துவருகின்றனர். ரசிகர்கள் வெறுப்பை வெளிப்படுத்தினாலும் ரோகித்திற்கு நன்றியை தெரிவித்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, அவரை “எங்களின் எப்போதைக்குமான கேப்டன்” என புகழ்ந்துள்ளது.