2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சுழற்சி அட்டவணை துவங்கிவிட்டது. இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியையும், பெண்களுக்கான சிறந்த ஒருநாள் அணியையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அதனுடன் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த டி20, ஒடிஐ மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டர்கள், சிறந்த அம்பயர்கள் முதலிய விருதுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது.
இந்நிலையில் யாருக்கு என்னென்ன விருதுகளை ஐசிசி வழங்கியுள்ளது என்பதை முழுமையாக இங்கே தெரிந்துகொள்ளலாம்..
2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த பிளேயிங் லெவன் மூன்று வடிவத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ், ஒருநாள் அணிக்கு இலங்கை அணியின் சரித் அசலங்கா மற்றும் டி20 அணிக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா மூன்று பேரும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ICC ஆண்கள் டெஸ்ட் அணி 2024: யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி புரூக், கமிந்து மெண்டிஸ், ஜேமி ஸ்மித் (WK), ரவீந்திர ஜடேஜா, பாட் கம்மின்ஸ் (C), மாட் ஹென்றி, ஜஸ்பிரிட் பும்ரா.
சயிம் அயூப், ரஹ்மனுல்லா குர்பாஸ், பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (WK), சரித் அசலங்கா (C), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அஸ்மத்துல்லா ஓமர்சாய், வனிந்து ஹசரங்கா,ஷாஹீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ராஃப், ஏஎம் கசன்ஃபர்.
ரோகித் சர்மா (கேப்டன்), டிராவிஸ் ஹெட், பில் சால்ட், பாபர் அசாம், நிக்கோலஸ் பூரன் (வி.கீப்பர்), சிக்கந்தர் ராசா, ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், வனிந்து ஹசரங்கா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
ஐசிசியின் சிறந்த பெண்கள் ஒருநாள் மற்றும் டி20 இரண்டு அணிக்கும் தென்னாப்பிரிக்கா வீராங்கனை லாரா வோல்வார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசியின் சிறந்த ஒருநாள் மற்றும் டி20 இரண்டு அணியிலும் இந்திய வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா இருவரும் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஸ் டி20 அணியில் மட்டும் இடம்பிடித்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வார்ட் (கேப்டன்), சாமரி அட்டபட்டு, ஹேலி மேத்யூஸ், மரிசான் கேப், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், எமி ஜோன்ஸ் (WK), தீப்தி ஷர்மா, சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ்.
ICC பெண்கள் டி20 அணி 2024: லாரா வோல்வார்ட் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, சாமரி அட்டபட்டு, ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், மெலி கெர், ரிச்சா கோஷ் (விக்.கீப்பர்), மரிசான் காப், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், தீப்தி ஷர்மா, சாடியா இக்பால்.
2024 ஆண்டு ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் டி20 கிரிக்கெட்டராகவும், பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
2024 சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர்: ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)
2024 சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர்: அஸ்மதுல்லா ஓமர்சாய் (ஆப்கானிஸ்தான்)
2024 சிறந்த டி20 கிரிக்கெட்டர்: அர்ஷ்தீப் சிங் (இந்தியா)
2024-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் கிரிக்கெட்டர்களாக இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா ஒருநாள் கிரிக்கெட்டராகவும், நியூசிலாந்தின் மெலி கெர் டி20 கிரிக்கெட்டராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
2024 சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர்: ஸ்மிரிதி மந்தனா (இந்தியா)
2024 சிறந்த டி20 கிரிக்கெட்டர்: மெலி கெர் (நியூசிலாந்து)
2024-ம் ஆண்டு வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்களான ஆண்கள் கிரிக்கெட்டில் இலங்கையின் கமிந்து மெண்டீஸ், பெண்கள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவின் அன்னரி டெர்க்சன் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வளர்ந்துவரும் ஆண்கள் கிரிக்கெட்டர் 2024: கமிந்து மெண்டீஸ் (இலங்கை)
வளர்ந்துவரும் பெண்கள் கிரிக்கெட்டர் 2024: அன்னரி டெர்க்சன் (தென்னாப்பிரிக்கா)
2024-ம் ஆண்டுக்கான சிறந்த அசோஷியேட் கிரிக்கெட்டர்களான ஆண்கள் பிரிவில் நமீபியா வீரர் ஹெகார்ட் எராஸ்மஸ்க்கும், பெண்கள் பிரிவில் யுஏஇ அணியின் கேப்டன் ஈஷா ஓசா இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான விருதை ஐசிசி தலைவர் ஜெய் ஷா நேரில் வழங்கினார்.
2024 அசோஷியேட் ஆடவர் கிரிக்கெட்டர்: ஹெகார்ட் எராஸ்மஸ் (நமீபியா)
2024 அசோஷியேட் மகளிர் கிரிக்கெட்டர்: ஈஷா ஓசா (யுஏஇ)
1990 காலகட்டத்தில் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரராக விளையாடிய ரிச்சர்ட் இல்லிங்வொர்த், 2024-ம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும், பார்டர் கவாஸ்கர் தொடரிலும், இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடரின்போது நடுவராக இருந்தார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் சர்ச்சைக்குரிய கேஎல் ராகுல் அவுட் மற்றும் நியூசிலாந்து தொடரில் ரிஷப் பண்ட்டின் சர்ச்சைக்குரிய அவுட் ஆகியவற்றிற்காக அவருடைய பெயர் பேசுபொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி 2024 ஆண்டின் சிறந்த நடுவர்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த்