ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீரர் பயிற்சியின்போது கழுத்தில் பந்து தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கிளப் அணிக்காக விளையாடிபோது பென் ஆஸ்டின் என்ற 17 வயது இளம் கிரிக்கெட் வீரர் பந்து தாக்கி உயிரிழந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை டி20 போட்டிக்கு முன்னதாக வலை பயிற்சியில் ஈடுபட்டபோது, தானியங்கி இயந்திரம் வீசிய பவுன்சர் பந்து ஆஸ்டினின் கழுத்துபகுதியை தாக்கியதாக சொல்லப்படுகிறது.. ஹெல்மெட் அணிந்து கொண்டு பேட்டிங் செய்து பயிற்சி மேற்கொண்டபோதும் அவர் சுருண்டு விழுந்துள்ளார்..
உடனடியாக அருகில் இருக்கும் மோனஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுழலில், 2 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு புதன்கிழமை அன்று உயிரிழந்தார்..
இதுகுறித்து தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப், "பென் ஆஸ்டின் மறைவால் நாங்கள் முற்றிலும் துயரமடைந்துள்ளோம்” என அறிக்கையில் கூறியுள்ளது..
கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் உள்ளூர் ஷெஃபீல்ட் ஷீல்ட் ஆட்டத்தின் போது கழுத்தில் பந்து தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது..