பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா ஐசிசி-யின் புதிய தலைவராக கடந்த டிசம்பர் 1-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ஏற்கனவே இணை செயலாளர் பதவியில் இருந்த தேவஜித் சைகியா இடைக்கால செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் இவர் இடைக்கால பதிவியில் தொடர்வார் என கூறப்பட்டுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் முகம் சுளிக்கும் வகையில் கடுமையான வார்த்தைகளை உதிர்த்தனர்.
இதனை ஐசிசி விசாரித்த நிலையில், சிராஜ் மற்றும் ஹெட் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முகமது சிராஜிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமும், இருவருக்கும் தலா ஒரு தகுதி இழப்பு புள்ளிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
2025 ஐபிஎல் ஏலத்தில் 1.10 கோடிக்கு ஏலம் சென்று எல்லோருடைய கவனத்தையும் பெற்ற 13 வயது வைபவ் சூர்யவன்ஷி, 2024 யு19 ஆசியக்கோப்பையில் வெகு தூரத்திற்கு சிக்சர்களை பறக்கவிட்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் வைபவ் சூர்யவன்சி அடித்த சிக்சர்களை பகிர்ந்திருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜுனைத்கான், 13 வயது சிறுவனால் இவ்வளவு தூரம் சிக்ஸ் அடிக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை இந்திய பவுலர்களால் வீழ்த்த முடியாததை கலாய்க்கும் வகையில் பதிவிட்டிருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய பவுலர்களால் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை இப்படித்தான் வீழ்த்த முடியும் என ஒரு புகைப்படைத்தை பகிர்ந்துள்ளார்.
வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்த அயர்லாந்து மகளிர் அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது. அதனை ஐசிசி தலைவரான ஜெய் ஷா பாராட்டி பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாட மறுப்பது குறித்து பேசியிருக்கும் ஷாகித் அப்ரிடி, இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவில்லை என்றால், எங்களுக்கும் இந்தியாவிற்கு சென்று விளையாடுவதற்கு எந்த காரணமும் இல்லை என கூறியுள்ளார்.
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவை சேர்ந்த அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, சீன ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 12 சுற்றுகள் முடிந்துள்ளன.
12 சுற்று ஆட்டங்களின் முடிவில் குகேஷ் மற்றும் லிரென் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் உள்ளனர். இன்னும் 2 சுற்று ஆட்டங்கள் மீதம் உள்ள நிலையில், முதலில் எந்த வீரர் 7.5 புள்ளிகளை எட்டுகிறாரோ அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.
11-வது புரோ கபடி லீக் தொடரின் முதலிரண்டு கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத் மற்றும் நொய்டாவில் நடைபெற்ற நிலையில், 3-ம் கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் இடையிலான போட்டியில் 46-25 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அபார வெற்றி பெற்றது.
2025-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 12-ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் நிலையில், இதில் ஆண்கள் தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சுமித் நாகல் நேரடியாக தகுதிபெற்றுள்ளார்.