விளையாட்டு

'சூரரைப் போற்று' படத்துக்காக நடிகர் சூர்யாவைப் பாராட்டிய ரஹானே!

webteam

சூரரைப் போற்று திரைப்படம் பார்த்ததாக கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திறம்பட வழிநடத்தியவர் கேப்டன் ரஹானே. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அவர் கோலி இல்லாத சமயங்களில் கேப்டனாக வழிநடத்துவது வழக்கம். மெல்போர்ன், சிட்னி மற்றும் காபா என மூன்று மைதானங்களில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்தியதோடு 2 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்ற உதவியுள்ளார் ரஹானே.

தற்போது இங்கிலாந்து உடனான கிரிக்கெட் தொடருக்காக சென்னை வந்துள்ள அவர், கொரோனா தனிமைப்படுத்துதலில் உள்ளார். அவரிடம் இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில், சென்னைக்கு உங்களை வரவேற்கிறேன். எதாவது தமிழ் சினிமா அல்லது சீரிஸ் பார்த்தீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துள்ள ரஹானே,

''ஆமாம். நான் சூரரைப் போற்று திரைப்படத்தை சப் டைட்டிலுடன் பார்த்தேன். எனக்கு பிடித்து இருந்தது. சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்'' என தெரிவித்துள்ளார். ரஹானேவின் இந்த இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் சூர்யா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.