விளையாட்டு

கேப்டன்களின் அணிதான் கிரிக்கெட் : ரவி சாஸ்திரி

கேப்டன்களின் அணிதான் கிரிக்கெட் : ரவி சாஸ்திரி

webteam

கோலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். 
இதுபற்றி ரவி சாஸ்திரி கூறும்போது, ’கிரிக்கெட் அணி என்பது கேப்டன் டீம்தான். அவர்தான் அணியை வழி நடத்துபவர். அவர் செயல்பாடுதான் முக்கியம். பயிற்சியாளரின் வேலை என்பது அவர்களின் பின்னால் இருந்து இயக்குவதும் அவர்களை ஊக்கப்படுவதும்தான். அதோடு அவர்களை சிறந்த மனநிலையில் தயார்படுத்துவதும். நான் ஏற்கனவே எனது ஆலோசனையின் படி அணியை தயார் செய்து வைத்திருக்கிறேன். அதன்படியே இப்போதும் செயல்பட உள்ளேன். எப்படி செயல்பட வேண்டும் என்பது வீரர்களுக்கும் தெரியும்’ என்று கூறியுள்ளார்.