விளையாட்டு

“ஒலிம்பிக் போட்டியை நடத்துவது மிகவும் கடினம்”- டோக்கியோ மருத்துவ சங்கம்

EllusamyKarthik

ஜப்பானில் திட்டமிட்டபடி வரும் ஜூலை 23-இல் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது சவாலான காரியம் எனவும், அது மிகவும் கடினம் எனவும் டோக்கியோ மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. இதனை அந்த சங்கத்தின் தலைவர் ஹாரூ ஓசாகி தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுதான் இப்படி சொல்வதற்கு காரணம் எனவும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். 

“தினந்தோறும் ஜப்பானின் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் ஜப்பானுக்கு வந்து ஒலிம்பிக்கில் பங்கேற்பது யதார்த்தத்தில் மிகவும் கடினம். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவது சவாலானது” என அவர் தெரிவித்துள்ளார். 

ஜப்பானில் இதுவரை 5,11,799 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கடந்த மார்ச் 31 தொடங்கி ஏப்ரல் 13 வரை சுமார் 40,022 பேர் நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.