விளையாட்டு

குதிரை தடை தாண்டும் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து

குதிரை தடை தாண்டும் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து

webteam

சர்வதேச குதிரை தடை தாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற கோவையைச் சேர்ந்த 2 மாணவர்கள் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை‌ சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

போர்ச்சுகலின் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச குதிரை தடை தாண்டும் போட்டியில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர்‌கள் அகில் மற்றும் சரவணன் வெற்றி பெற்று மூன்றாம் இடம்பிடித்துள்ளனர். நாடு திரும்பிய மாணவர்கள் இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை‌ தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

போட்டியில் பங்கேற்ற குதிரையுடன் அவர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் கோவையை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்துகொள்ளவில்லை.