விளையாட்டு

காமன்வெல்த் நீச்சல் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் இறுதிச்சுற்றுக்கு தகுதி

JustinDurai

காமன்வெல்த் நீச்சல் போட்டியில் இதுவரை இந்திய வீரர்கள் பதக்கம் வெல்லாத சூழலில் இன்றிரவு நடக்கும் இறுதிச்சுற்றில் ஸ்ரீஹரி நடராஜ் அதனை மாற்றி வரலாறு படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு நடந்த ஆடவருக்கான 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியின் அரை இறுதி சுற்றில், இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். 21 வயதான அவர் 50 மீட்டர் தூரத்தை 25.38 வினாடிகளில் கடந்துள்ளார். ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை நடந்த 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில், இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட இறுதிச் சுற்றுகளுக்குள் நுழைந்த முதல் இந்திய நீச்சல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். காமன்வெல்த் விளையாட்டில் நீச்சல் போட்டியில் இதுவரை இந்திய வீரர்கள் பதக்கம் வென்றது கிடையாது. இச்சூழலில் இன்றிரவு நடக்கும் இறுதிச் சுற்றில் ஸ்ரீஹரி நடராஜ் அதனை மாற்றி வரலாறு படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் படிக்கலாம்: காமன்வெல்த்: இந்தியா இன்று விளையாடும் ஆட்டங்கள் என்ன?