ஆடவர் 100 மீட்டர் நீச்சல் ஃப்ரீஸ்டைல் போட்டியில் ஸ்ரீஹரி நட்ராஜ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இங்கிலாந்தில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நேற்றிரவு கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் மற்றொரு போட்டியான லான் பவுல்ஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் தனியா சௌத்ரி 21-10 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் டீ ஹோகனிடம் தோல்வியை தழுவி ஏமாற்றமளித்தார். ஆடவர் 100 மீட்டர் நீச்சல் ஃப்ரீஸ்டைல் போட்டியில் ஸ்ரீஹரி நட்ராஜ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி எதிர்த்து விளையாடி வருகிறது. மேலும் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா - கானா அணிகள் இன்று மாலை மோதுகின்றன. பேட்மிண்டன் கலப்பு அணி பிரிவில் இரவு 11 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதுகின்றன.
இதையும் படிக்க: டி20 தொடரையும் வெல்லுமா இந்தியா? - வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இன்று முதலாவது போட்டி