விளையாட்டு

பாக். கிரிக்கெட் வீரர்களை கலாய்த்த காமெடி நடிகர்!

பாக். கிரிக்கெட் வீரர்களை கலாய்த்த காமெடி நடிகர்!

webteam

பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள் துபாயில் நேற்று தொடங்கின. தொடக்கவிழா, ஆட்டம், பாட்டம் என பிரமாண்டமாக நடந்தது. இதில் இந்தி சினிமாவின் காமெடி நடிகரும் டிவி தொகுப்பாளரும் ஸ்டேண்ட் அப் காமெடியனுமான கபில் சர்மா பங்கேற்று அனைவரையும் சிரிக்க வைத்தார். 

அவரது கலாய்த்தலில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டேரன் ஷமி, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டான், அக்‌ஷர், பாகிஸ்தானின் ஹசன் அலி, ஹரிஸ் சோகைல், கம்ரன் அக்மல், முகமது ஹபீஸ் ஆகியோர் மாட்டிக்கொண்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கம்ரன் அக்மலை கபில்சர்மா கலாய்த்தபோது பயங்கர சிரிப்பொலி. 

அவரின் கலாய்: 
‘நீங்க, உங்க தம்பி உமர், உங்க உறவினர்கள் பாபர் அஸாம், சபீர் அஸாம்னு எல்லாருமே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில இருக்கீங்க. உங்க எல்லாருக்கும் குழந்தைகள் இருக்கு. அப்படின்னா, பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு வேற எந்த குடும்பமும் தேவையில்லைன்னு முடிவு பண்ணிட்டிங்களா?’
-சிரிப்பு அடங்க அதிக நேரமானது ஸ்டேடியத்தில்.

‘சிறந்த காமெடியன் கபில் சர்மா. கிரிக்கெட் வீரர்களும் ஜாலியாக இருக்கட்டும் என்று அவரை அழைத்து வந்தோம்’ என்றார் பெஷாவர் ஜல்மி கிரிக்கெட் அணியின் அதிபர் ஜாவேத் அப்ரிடி.

இந்த லீக் போட்டிகள் துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கின்றன. இறுதிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும்.