விளையாட்டு

நிறைவு பெற்ற காமன்வெல்த் போட்டிகள்: இந்திய அணிக்கு மூன்றாமிடம்

நிறைவு பெற்ற காமன்வெல்த் போட்டிகள்: இந்திய அணிக்கு மூன்றாமிடம்

webteam

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 11 நாட்களாக களைக் கட்டிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு பெற்றன. இந்திய அணி பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைப்பெற்று வந்த 21வது காமன்வெல்த் போட்டிகள் நிறைவுபெற்றன. போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 80 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. 59 வெள்ளிப் பதக்கங்கள் 59 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 198 பதக்கங்களை ஆஸ்திரேலிய அணி வென்றது. இங்கிலாந்து அணி 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களை வென்று இரண்டாவது இடம் பிடித்தது. இந்திய அணி 26 தங்கம் 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்தது. பதக்கப்பட்டியலில் கனடா அணி நான்காவது இடத்தையும், நியூசிலாந்து அணி ஐந்தாவது இடத்தையும் பிடித்தன. அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வரும் 2022-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளன.

நிறைவு விழாவில் குத்துச்சண்டை நாயகி மேரிகோம் இந்தியா சார்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார். 5 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றுள்ள 35 வயது மேரிகோம் ஒலிம்பிக் போட்டியிலும் வெண்கலப்பதக்கம் வென்றார். தற்போது காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச்செல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது தனக்களிக்கப்பட்ட பெரிய கௌரவம் என மேரி கோம் கூறியுள்ளார்.