விளையாட்டு

அயர்லாந்து கனவை நொறுக்கிய வோக்ஸ், பிராட்: 38 ரன்னில் சுருண்டது!

அயர்லாந்து கனவை நொறுக்கிய வோக்ஸ், பிராட்: 38 ரன்னில் சுருண்டது!

webteam

முதல் டெஸ்ட் வெற்றியை எதிர்பார்த்திருந்த அயர்லாந்து அணியின் கனவை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் நொறுக்கினர்.

இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டன் லார்ட்சில் நடந்தது. முதல் இன்னிங்சில், இங்கிலாந்து அணி 85 ரன்களும், அயர்லாந்து 207 ரன்களும் எடுத்தன. 122 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 303 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் அயர்லாந்துக்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது வெற்றியை பதிவு செய் யும் கனவுடன் ஆடியது. அவர்கள் கனவை, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகி யோர் நொறுக்கினர். அயர்லாந்து அணி 15.4 ஓவர்களில் 38 ரன்னில் சுருண்டது. டெஸ்ட் வரலாற்றில் 7-வது குறைந்த பட்ச ஸ்கோர் இது. இதன் மூலம் இங்கிலாந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கிறிஸ் வோக்ஸ், 6 விக்கெட்டுகளையும் பிராட் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.