விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கிறிஸ் கெயில்!

வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கிறிஸ் கெயில்!

jagadeesh

இலங்கைக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் கிறிஸ் கெயில்.

இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. முதல் ஆட்டம் மார்ச் 3-ஆம் தேதியும், அடுத்த ஆட்டம் 5-ஆம் தேதியும், கடைசி ஆட்டம் 7-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. இந்த 3 ஆட்டங்களுமே ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆன்டிகுவா மைதானத்தில் முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் விளையாடவுள்ள 14 போ் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 41 வயதான கிறிஸ் கெயில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பா் லீக் டி20 தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடியதன் மூலம் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2 ஆண்டுகளுக்கு பின் இடம்பெற்றுள்ளார் கிறிஸ் கெயில். இதேபோல் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஃபிடல் எட்வா்ட்ஸ் 9 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் கிறிஸ் கெயில். இதுவரை மொத்தம் 103 டெஸ்ட், 301 ஒரு நாள் போட்டி, 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.