விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்!

வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்!

webteam

வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடரை கைப்பற்றி விட்டது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன. முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 20-ஆம் தேதி பிரிட்ஜ்டவுணில் நடக்கிறது. முதல், 2 ஒரு நாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

இதில் மூத்த வீரர் 39 வயதான கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் விளையாடிய கெய்ல், அதற்குப் பிறகு சொந்த காரணங்களுக்காக ஒரு நாள் அணியில் இடம்பெறவில்லை.

(லெவிஸ்)

இதே போல் அணியில் இடம் பெறாமல் இருந்த, மற்றொரு அதிரடி வீரர் எவின் லெவிஸூம் அணிக்கு தேர்வாகியுள்ளார். அணியில் டேரன் பிரவோ, ஹெட்மயர், ஷாய் ஹோப் ஆகிய முன்னணி வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.