விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

webteam

சீன ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சர்வதேச தரநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சீன வீராங்கனை ஹான் யூவை எதிர்த்து விளையாடினார்.

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-15, 21-13 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்றார். இதனையடுத்து காலிறுதி போட்டியில் சீன வீராங்கனை எதிர்த்து சிந்து விளையாட உள்ளார். இரண்டாவது சுற்று ஆட்டங்களில் சாய்னா, பிரணாய் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.