சீன ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார். சிந்துவின் தோல்வியைத் தொடர்ந்து, சீன ஓபனில் இந்தியர்களின் பதக்க வாய்ப்பு தகர்ந்தது. காலிறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான சிந்து, தரவரிசையில் 89ஆவது இடத்தில் உள்ள சீனாவின் ஃபாங்ஜியே உடன் விளையாடினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஃபாங்ஜியே 21-11, 21-10 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தினார்.