கோவா செஸ் உலகக்கோப்பை தொடரிலிருந்து குகேஷ் வெளியேற்றம் x
செஸ்

செஸ் உலகக்கோப்பையில் குகேஷ் தோல்வி.. 3வது சுற்றிலேயே தொடரிலிருந்து வெளியேறி அதிர்ச்சி!

கோவாவில் நடைபெற்ற செஸ் உலகக்கோப்பை போட்டியின் 3வது சுற்றிலேயே தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார் நடப்பு உலக சாம்பியன் குகேஷ்..

Rishan Vengai

கோவாவில் நடைபெற்ற செஸ் உலகக்கோப்பையில், இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 3வது சுற்றில் ஜெர்மனியின் ஃபிரெடிரிக் ஸ்வேனிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். கடந்த ஆண்டு உலக சாம்பியனாகி வரலாறு படைத்த குகேஷின் இந்த தோல்வி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டரான குகேஷ், கடந்தாண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அப்போதைய உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை தோற்கடித்து உலக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

கடைசி சுற்றான 14 சுற்றுகள் வரை முன்னேறிய குகேஷ், இறுதி மோதலில் டிங் லிரெனை வீழ்த்தி இளம் வயதில் (18) உலக சாம்பியனாகி வரலாறு படைத்தார்..

இந்தசூழலில் நடப்பு உலக சாம்பியனாக கோவாவில் நடைபெற்ற செஸ் உலகக்கோப்பையில் பங்கேற்ற குகேஷ், அதிர்ச்சிக்குரிய வகையில் 3வது சுற்றிலேயே தொடரிலிருந்து வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்..

கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்றுவருகிறது. அதன் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வரும் நிலையில், இந்தியாவின் குகேஷும், ஜெர்மனியின் ஃபிரெடிரிக் ஸ்வேனும் மோதிக்கொண்டனர்..

இந்தியாவின் குகேஷுக்கும், ஜெர்மனியின் ஃபிரெடிரிக் ஸ்வேனுக்கும் இடையேயான முதல் போட்டி டிராவில் முடிய, இன்று நடந்த இரண்டாவது போட்டியில் ஃபிரெடிரிக் ஸ்வேனே குகேஷை வீழ்த்தினார் . இதனால், மூன்றாவது சுற்றிலேயே குகேஷ் தொடரிலிருந்து அதிர்ச்சிக்குரிய வகையில் வெளியேறியுள்ளார்..