நம்பர் 1 வீரர் பிரக்ஞானந்தா x
செஸ்

NO.1 இந்திய வீரரானார் பிரக்ஞானந்தா.. உலகத் தரவரிசையில் 4-ம் இடம்!

இந்தியாவின் நம்பர் 1 வீரராகி மாறி இந்தியாவின் இளம் டேலண்ட் பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.

PT WEB

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற UZCHESS மாஸ்டர் தொடரின் பட்டத்தை வென்றதன் மூலம், உலக தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்தார் செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா.

நம்பர் 1 இந்திய வீரராக மாறி சாதனை!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற UZCHESS மாஸ்டர் தொடரில் 10 சுற்றுகள் கொண்ட தொடரின் முடிவில் 5.5 புள்ளிகள் பெற்றிருந்த பிரக்ஞானந்தா, டை பிரேக்கர் சுற்றில் தொடரை வென்று அசத்தினார்.

இதன் மூலம் கிளாசிக்கல் பிரிவில் உலக தரவரிசை பட்டியலில் 2778.3 புள்ளிகள் பெற்று 4ஆம் இடத்திற்கு முன்னேறினார். இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

உலக சாம்பியன் குக்கேஷ் 2776.6 புள்ளிகள் பெற்று 5ஆம் இடத்திலும், இந்தியாவின் மற்றொரு வீரர் அர்ஜுன் எரிகாசி 2775.7 புள்ளிகள் பெற்று உலக தரவரிசை பட்டியலில் 6 ஆம் இடத்திலும் உள்ளனர்.

2024ஆம் ஆண்டு பிரக்ஞானந்தாவிற்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு அமையாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறார்.