குகேஷ்  எக்ஸ் தளம்
செஸ்

சாதகமாக மாறிய சீன வீரரின் ரூக் F2 நகர்வு.. உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் குகேஷ்!

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ், சீனாவின் டிங் லிரனை வீழ்த்தும் முயற்சியில் கடினமாக விளையாடி வந்தார்.

Jayashree A

குகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை பெற்றார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ், சீனாவின் டிங் லிரனை வீழ்த்தும் முயற்சியில் கடினமாக விளையாடி வந்தார். 13 சுற்றுகள் முடிந்த நிலையில் இருவரும் சரிசம நிலையில் இருந்தனர்.

இன்று நடந்த இறுதி போட்டியில் இருவரும் நன்றாக விளையாண்டு வந்தனர். அதனால் ஆட்டமானது ட்ராவில் முடியும் என்று நினைத்திருந்த நேரம் டிங்லிரான் கடைசி நிமிடத்தில் ரூக் F2 வை நகர்த்தி தவறு செய்ததால், குகேஷ் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் டிங்லிரான் ஆட்டத்திலிருந்து விலகினார். முடிவில் குகேஷ் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

குகேஷ் வென்றது மகிழ்ச்சி: ஆனந்த்

விஸ்வநாத ஆனந்திற்கு பிறகு இந்தியாவின் அடுத்த உலக சாம்பியன் பட்டத்தை பெற்ற குகேஷுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.