Gukesh Carlsen Berlin Draw  SuperUnited Rapid & Blitz Croatia 2025
செஸ்

ஒரே நிமிடத்தில் போட்டியை முடித்த மேக்னஸ் கார்ல்ஸன் - குகேஷ்... அதென்ன பெர்லின் டிரா..?

SuperUnited Rapid & Blitz Croatia 2025 தொடரை மேக்னஸ் கார்ல்ஸன் வென்றார். குகேஷ் மூன்றாம் இடம் பிடித்தார்.

karthi Kg

ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்லெசனுடன் எந்த இந்திய வீரர் மோதினாலும் அது வைரல் செய்தி ஆகிவிடுகிறது. அதிலும்  நடப்பு உலக சாம்பியனான குகேஷ் சில வாரங்களுக்கு முன்பு மேக்னஸ் கார்ல்சனை வென்றதும், கார்ல்சன் மேஜையை தட்டியது சர்வதே அளவில் வைரல் வீடியோவானது. கிராண்ட் செஸ் தொடரின் ஒரு பகுதியாக SuperUnited Rapid & Blitz Croatia 2025 ஜூன் 30 முதல் ஜூலை 7 வரை நடைபெற்றது. 

அந்தத் தொடரின் BLitz பிரிவு ஆட்டத்தில் (13வது சுற்று) கிராண்ட் மாஸ்டர் குகேஷும், மேக்னஸ் கார்ல்ஸனும் மோதினார்கள். இருவருக்கு தலா ஐந்து நிமிடங்கள் என்கிற அடிப்படையில் நடைபெற்ற பிளிட்ஸ் போட்டியில் e4,e5, Nf3 ,Nc6, Bb5,Nf6  என ஓப்பன் பெர்லின் டிபென்ஸ் ஆடத் தொடங்கினார். தொடர்ச்சியாக பெர்லின் டிஃபென்ஸை இருவரும் ஆட, repetitive மூவ் மூலம் ஆட்டத்தை டிரா செய்தனர். ஒரு நிமிடம் கூட ஆட்டம் நீடிக்கவில்லை . சரியாக, பதினான்காவது மூவில் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது.

பெர்லின் டிரா

பெர்லின் டிரா இந்த துல்லியமான நகர்வு வரிசையை பின்பற்றுகிறது:

e4 e5

Nf3 Nc6

Bb5 Nf6 (Berlin Defence)

O-O Nxe4

d4 Nd6

dxe5 Nxb5

a4 Nbd4

Nxd4 Nxd4

Qxd4 d5

exd6 e.p. Qxd6

Qe4+ Qe6

Qd4 Qd6

Qe4+ Qe6

Qd4 Qd6

குகேஷுக்கு கிளாக்கில் 5.10 நிமிடங்களும், கார்ல்ஸனுக்கு 4.45 நிமிடங்களும் மீதம் இருந்தன. அன்று விளையாடிய நான்கு போட்டிகளில் கார்ல்ஸன் மூன்று போட்டியை டிராவுக்கு ஆடினார். கோப்பை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால், survival மோடில் விளையாடுவதாக இதுகுறித்துப் பேசியிருந்தார் கார்ல்ஸன். 

SuperUnited Rapid & Blitz Croatia 2025 தொடரை மேக்னஸ் கார்ல்ஸன் வென்றார். குகேஷ் மூன்றாம் இடம் பிடித்தார்.