கார்ல்சன், கார்த்திகேயன் முரளி
கார்ல்சன், கார்த்திகேயன் முரளி pt web
செஸ்

உலகின் No.1 செஸ் வீரர் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி!

Angeshwar G

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னனி வீரர்கள் கலந்து கொள்ளும் மாஸ்டர்ஸ் ஓபன் செஸ் போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. அக்டோபர் 10 ஆம் தேதி முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரை நடக்கிறது. 160 வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி 9 சுற்றுகளைக் கொண்டது.

இதன் 7 ஆவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனும் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன் முரளியும் மோதினர். இப்போட்டியில் கார்த்திகேயன் முரளி கருப்புக் காய்களுடன் ஆடினார். இப்போட்டியில் கார்ல்சனை வீழ்த்தி கார்த்திகேயன் முரளி அபார வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் Classical rated போட்டியில் கார்ல்சனை வீழ்த்திய 3 ஆவது தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றவரானார் கார்த்திகேயன் முரளி. இதற்கு முன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பெண்ட்ல ஹரிகிருஷ்ணா ஆகியோர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருந்தனர். உலகின் நம்பர் 1 செஸ் வீரராக மேக்னஸ் கார்ல்சன் ஆன பின் இந்தியாவில் விஸ்வநாதன் மட்டுமே அவரை வீழ்த்தி இருந்தார். இந்த வரிசையில் தற்போது கார்த்திகேயன் முரளியும் இணைந்துள்ளார். இருவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் SL நாராயணன், ஜவோகிர் சிந்தரோவ் (UZB), அர்ஜுன் எரிகைசி, டேவிட் பரவியன் மற்றும் நோடிர்பெக் யாகுபோவ் (UZB) ஆகியோருடன் கார்த்திகேயன் முரளி முன்னிலையில் உள்ளார். 8 ஆவது சுற்று இன்று மாலை இந்திய நேரப்படி 3 மணிக்கு நடக்கிறது.