செஸ் காட்சிப்போட்டியில் குகேஷை வீழ்த்திய அமெரிக்க வீரர், குகேஷின் ராஜாவை எடுத்து வீசி கொண்டாடியுள்ளார்.
இந்திய - அமெரிக்கா இடையேயான செஸ் காட்சி போட்டி, டெக்ஸாஸில் நடைபெற்றது. இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா ஏற்கனவே தோல்வியடைந்த நிலையில், இறுதியாக குகேஷூம், உலகின் இரண்டாம் நிலை வீரரான ஹிஹாரு நாகமுராவும் மோதினர். இதில் குகேஷ் தோல்வியடைந்தார்.
உடனே ஹிஹாரு நகமுரா, குகேஷின் ராஜாவை எடுத்து பார்வையாளர்களிடம் வீசி வெற்றியை கொண்டாடினர். இது அவர் மரியாதை குறைவாக நடந்துகொண்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேவேளையில் இந்த காட்சி போட்டியில், செஸ் காய்களை தூக்கி எறிவது, எதிராளியின் ராஜாவை நொறுக்குவது போன்றவை அனுமதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆற்றலையும், உற்சாகத்தையும் வழங்கும் வகையில், இது அனுமதிக்கப்பட்டிருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.