aarit kapil web
செஸ்

’தம்மாதுண்டு ஆங்கர்தான்..’ அமெரிக்க செஸ் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய 9 வயது இந்திய சிறுவன்! #NewRecord

டெல்லியை சேர்ந்த 9 வயது ஆரித் கபில் அமெரிக்காவை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Rishan Vengai

புவனேஷ்வரில் நடைபெற்ற கேஐஐடி சர்வதேச ஓபன் செஸ் தொடரில் பங்கேற்ற டெல்லியை சேர்ந்த 9 வயது சிறுவனான ஆரித் கபில், அமெரிக்காவை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டரான ராசெட் ஜியாடினோவை தோற்கடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இதன்மூலம் ஒரு செஸ் கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த இளம் இந்தியர் என்ற பெருமையையும், உலகத்தின் மூன்றாவது இளம்வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.

செஸ் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய இளம் இந்தியர்..

புவனேஷ்வரில் நடைபெற்ற கேஐஐடி சர்வதேச ஓபனில் கிளாசிக்கல் செஸ் போட்டியில் 9 வயது ஆரித் கபிலும், 66 வயது அமெரிக்க செஸ் கிராண்ட்மாஸ்டர் ராசெட் ஜியாடினோ இருவரும் மோதினர்.

முதலில் சிறுவன்தானே என நினைத்து விளையாடிய கிராண்ட்மாஸ்டர் ராசெட் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய போதிலும் சில தவறுகளை இழைத்தார். பின்னர் மாஸ்டரின் தவறுகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட 9 வயது ஜீனியஸ் ஆரித் கபில் போட்டியின் 63வது நகர்வில் செஸ் கிராண்ட்மாஸ்டரை கட்டிம்கட்டி வீழ்த்தினார்.

chess

இந்த வெற்றியின் மூலம் ஒரு செஸ்ட் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய இளம் இந்தியர் (9 வருடங்கள் 2 மாதங்கள் 18 நாட்கள்) என்ற சாதனையை ஆரித் கபில் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் செஸ் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய உலகின் மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

முதலிடத்தில் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் அஷ்வத் கௌசிக் படைத்துள்ளார். 8 வயதான கௌசிக் போலந்தின் செஸ் கிராண்ட்மாஸ்டரான ஜாசெக் ஸ்தூபாவை இந்த ஆண்டு தோற்கடித்தார்.

செஸ் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய இளம் வயதினர்:

  • அஷ்வத் கௌசிக் - சிங்கப்பூர் - 8 வருடங்கள் 2 மாதங்கள்

  • லியோனிட் இவானோவிக் - செர்பியா - 8 வருடங்கள் 11 மாதங்கள்

  • ஆரித் கபில் - இந்தியா - 9 வருடங்கள் 2 மாதங்கள்.