செஸ் கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதி web
செஸ்

16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர்.. தமிழக வீரர் இளம்பரிதி சாதனை!

தமிழகத்தைச்சேர்ந்த 16 வயது செஸ் வீரரான இளம்பரிதி செஸ்ட் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்..

Rishan Vengai

தமிழக வீரர் இளம்பரிதி, 16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் 90வது மற்றும் தமிழ்நாட்டின் 35வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம்பரிதிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். SDAT திட்டத்தின் பயனாளி அவர், தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் செஸ் போட்டியின் மூலம் இந்தியாவின் 90வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார் தமிழகத்தின் இளம்பரிதி.. தமிழகத்திலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் 35-வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார்..

இளம்பரிதி

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இளம்பரிதிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.. இணையத்தில் பதிவிட்டிருக்கும் அவர், ”தமிழகத்திற்கும் இந்திய சதுரங்கத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் மற்றொரு பெருமைமிக்க தருணம்!

இந்தியாவின் 90வது கிராண்ட்மாஸ்டராகவும், தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டராகவும் ஆன இளம்பர்த்தி A R-க்கு வாழ்த்துக்கள்!

SDAT-ன் சாம்பியன்ஸ் மேம்பாட்டுத் திட்டத்தின் பெருமைமிக்க பயனாளியான அவர், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த GM4 #Bijeljina2025 சதுரங்க விழாவில் தனது இறுதி GM விதிமுறையைப் பெற்றார். அவரது எதிர்கால சதுரங்கப் பயணத்தில் தொடர்ந்து வெற்றி பெறவும், இன்னும் பல வெற்றிகளை அடையவும் வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்..

துணை முதல்வரை தொடர்ந்து முதலமைச்சர் முக ஸ்டாலினும் இளம்பரிதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், "தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டராக இளம்பரிதி பிரகாசிக்கிறார்!

வரலாற்றில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி, தனது பட்டத்தைப் பெற்று, தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் மற்றொரு ரத்தினத்தைச் சேர்த்துள்ளார்.

தமிழ்நாடு சதுரங்கத்தில் சூரியன் உதிக்கும்போது, ​திராவிட மாடல் ஒவ்வொரு நம்பிக்கைக்குரிய நகர்வையும் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காக மாற்றும். இன்னும் பல தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி வருகின்றனர்” என பாராட்டியுள்ளார்..