விளையாட்டு

பலமானது சிஎஸ்கே: டூ ப்ளஸ்ஸி, லுங்கி நிகிடி வருகை !

பலமானது சிஎஸ்கே: டூ ப்ளஸ்ஸி, லுங்கி நிகிடி வருகை !

jagadeesh

ஐ.பி.எல். தொடரில்‌ பங்கேற்க சிஎஸ்கே அணியில் உள்ள தென்னாப்பிரிக்க வீரர்களான டூ‌‌‌ பிளஸ்ஸி மற்றும் லுங்கி நின்கிடி ஆகியோர் துபாய் வந்துள்ளனர்.

சக வீரர்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் இருவரும் ஒரு வாரம்‌ தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கு‌ மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. முன்னதாக, சிஎஸ்கே அணியின் ‌மற்ற வீரர்கள் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த 21ஆம் தேதி துபாய் சென்றனர். ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ள ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது.

ஏற்கெனவே அணியின் முக்கிய பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா சொந்தக் காரணங்களுக்காக நாடு திரும்பினார். இதனையடுட்டு சிஎஸ்கே ஒரு முக்கிய வீரர் இல்லாமல் திணறியது. இப்போது டூ ப்ளஸ்ஸி, லுங்கி நிகிடி அணியுடன் இணைந்துள்ளது பெரும் பலத்தை கூட்டியுள்ளது.