விளையாட்டு

இறங்கி வந்து சிக்ஸர் அடித்த தோனி : விசில் பறக்கவிட்ட ரெய்னா

இறங்கி வந்து சிக்ஸர் அடித்த தோனி : விசில் பறக்கவிட்ட ரெய்னா

webteam

பயிற்சியின்போது தோனி களத்தில் இறங்கி வந்து அடித்த சிக்ஸருக்கு சுரேஷ் ரெய்னா மாஸாக விசில் அடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 5 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தோனி தலைமையிலான சென்னை அணியினர் இன்று புறப்பட்டு யுஏஇ சென்றனர்.

இந்நிலையில் அவர்கள் பயிற்சி செய்த வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் அம்பத்தி ராயுடு, முரளி விஜய், பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர் உள்ளிட்டோர் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் தோனி பந்துவீசுவது, ரெய்னா பேட்டிங் செய்வது ஆகிய காட்சிகளும் உள்ளன.

இறுதியாக தோனி இறங்கி வந்து சிக்ஸர் அடிக்க, அவருக்கு பின்னால் நிற்கும் ரெய்னா விசில் அடிக்க வீடியோ நிறைவு பெறுகிறது. இதற்கிடையே வீரர்கள் மற்றும் மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உடல் வெப்பநிலை அளவிடும் காட்சியும் உள்ளது.