விளையாட்டு

குறைந்த ஸ்கோரில் இருந்து மீண்ட சிஎஸ்கே.. 100 ரன்களை தாண்டியது

குறைந்த ஸ்கோரில் இருந்து மீண்ட சிஎஸ்கே.. 100 ரன்களை தாண்டியது

EllusamyKarthik

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 30 ரன்களுக்கு ஆறு விக்கெட்டை இழந்து தடுமாறியது. 

ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையான குறைந்தபட்ச ஸ்கோரை சென்னை பதிவு செய்து விடுமோ என எதிர்பார்த்த நிலையில் நிலைத்து நின்று ஆடினார் சாம் கர்ரன்.

நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி 84 ரன்களை பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் பதிவு செய்தது.

இந்நிலையில் சென்னை அதற்கும் குறைவான ரன்களை பதிவு செய்து விடுமோ என எதிர்பார்த்த நிலையில் அதிலிருந்து தப்பி ரன்களை எடுத்தது.