விளையாட்டு

டிராவில் முடிந்த சென்னை - கேரளா ஆட்டம் !

டிராவில் முடிந்த சென்னை - கேரளா ஆட்டம் !

jagadeesh

ஐஎஸ்எல் தொடரில் சென்னை - கேரளா அணிகள் இடையிலான நேற்றைய ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கோல் அடிக்க கிட்டிய பொன்னான பெனால்டி வாய்ப்பை சென்னை அணி கோட்டை விட்டது. 

மேலும் 4-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் சென்னை வீரர் ஜகுப் சைல்வெஸ்டர் உதைத்த பந்தை கேரளா கோல் கீப்பர் அல்பினோ கோம்ஸ் பாய்ந்து தடுத்து நிறுத்தினார். முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. முன்னதாக நடந்த ஜாம்ஷெட்பூர் எப்.சி.-ஒடிசா எப்.சி. இடையிலான ஆட்டமும் டிராவில் (2-2) முடிந்தது.

இதில் ஒரு கட்டத்தில் 0-2 என்ற கணக்கில் ஒடிசா பின்தங்கிய நிலையில் டிகோ மவுரிசியோ இரண்டு கோல்கள் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன.