விளையாட்டு

நடித்தார் சண்டிமால்: எச்சரித்தார் நடுவர்

நடித்தார் சண்டிமால்: எச்சரித்தார் நடுவர்

webteam

பேட்ஸ்மேனை ஏமாற்றுவது போல நடித்த இலங்கை அணியின் கேப்டன் சண்டிமாலை, நடுவர் எச்சரித்தார். 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இதில் இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இலங்கை வீரர் ஷனாகா வீசிய பந்தை அடித்தார் அவர். பீல்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை கேப்டன் சண்டிமால், பந்தைத் தடுக்க முயன்றார். பின்னர் கையில் பந்து இல்லாமல் விக்கெட் கீப்பரை நோக்கி எறிவதை போல நடித்தார். 

புதிய விதியின்படி, பேட்ஸ்மேனின் கவனத்தைத் திசை திருப்ப, பந்தை வீசுவது போல செய்தால் எதிரணிக்கு ரன்களை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய கேப்டன் கோலி நடுவரிடம் இதற்கு ரன்கள் வழங்க வேண்டும் என்று கேட்டார். ஆனால், நடுவர் சண்டிமாலை எச்சரித்து விட்டுவிட்டார்.