விளையாட்டு

சிந்துவுக்கு கிடைத்த பரிசு: கரோலினா மகிழ்ச்சி

சிந்துவுக்கு கிடைத்த பரிசு: கரோலினா மகிழ்ச்சி

webteam

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள பி.வி. சிந்துவுக்கு கிடைத்துள்ள பரிசுத் தொகை குறித்து ஸ்பெயின் பேட்மிண்டன் வீராங்கனை கரோலினா மரின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் சிந்துவை தோற்கடித்து தங்கம் வென்ற த‌மக்கு, ஸ்பெயின் அரசு 70 லட்சம் ரூபாய் மட்டுமே பரிசு அளித்ததாக மரின் கூறியுள்ளார். ஆனால் சிந்துவுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில் 13 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் முயற்சிக்கு, இந்தியா முன்னோடியாகத் திகழ்வதை இது உணர்த்துவதாகவும் கரோலினா மரின் தெரிவித்துள்ளார்.