விளையாட்டு

'மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோற்றோம்' - கே.எல்.ராகுல் அதிருப்தி

'மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோற்றோம்' - கே.எல்.ராகுல் அதிருப்தி

JustinDurai

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதே தோல்விக்கு காரணம் என கேப்டன் கே.எல்.ராகுல் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

போட்டிக்குப் பின்னர் பேட்டியளித்த கே.எல்.ராகுல், 297 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சிறப்பான முறையிலேயே ஆட்டத்தை தொடங்கியதாகக் கூறினார். மிடில் ஆர்டர் வரிசையில் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் போதிய பங்களிப்பை செலுத்தவில்லை என்று ராகுல் குறிப்பிட்டார்.

25 ஓவர்கள் வரை இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தபோதிலும், தென்னாப்ரிக்க பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி இ்ந்திய அணியின் முக்கியமான விக்கெட்டுகளை சாய்த்துவிட்டனர் என அவர் தெரிவித்தார். தென்னாப்ரிக்காவுக்கு அமைந்தது போன்ற பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு அமையவில்லை எனவும் ராகுல் குறிப்பிட்டார்.