Cape Verde vs Spain  FIFA Worldcup 2026
விளையாட்டு

ஒரு கோல் கூட அடிக்காத ஸ்பெயின் : ஆட்டம் காட்டிய கத்துக்குட்டி அணி.. அந்த அணி செய்த தவறுகள் என்ன.?

கால்பந்தின் ஜாம்பவான் அணியான ஸ்பெயின் அணியை கத்துக்குட்டி அணியான கேப் வெர்டே திணறவைத்து டிரா செய்தது இந்த உலகக்கோப்பையில் ஒரு ஆச்சரியமாக மாறியுள்ளது.

Praveen Joshva L

ஃபிபா உலகக்கோப்பை தொடர் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில், குரூப் H பிரிவின் முதல் போட்டியில் கால்பந்து தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணியும், 64-வது இடத்தில் இருக்கு கேப் வெர்டே அணியும் மோதின.

இந்த போட்டியில் அசுர பலத்தில் இருக்கும் ஸ்பெயின் அணி, கேப் வெர்டே அணியை எளிதில் ஊதித்தள்ளி விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்ப போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஸ்பெயின் அணி கேப் வெர்டே அணியின் கோல்போஸ்ட்டை தொடர்ந்து முற்றுகையிட்டு தாக்குதல் ஆட்டம் ஆடியது.

ஸ்பெயின் அணி கோல் கம்பத்தை நோக்கி அடித்த ஏராளமான பந்துகள் கோல் போஸ்டில் பந்து திருப்பியது. இதனால் ஸ்பெயின் வீரர்களும், ரசிகர்களும் கடும் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு கேப் வெர்டே அணியின் கோல் கீப்பர் டெய்லான் லிவ்ரமென்டோ (DAILON LIVRAMENTO) தடுப்பு அரணாக நின்று கோலை நோக்கி அடித்த ஸ்பெயினின் பல்வேறு வாய்ப்புகளை தடுத்தார்.

இறுதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இந்த போட்டியில் 70% நேரம் பந்து ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஸ்பெயின் அணி கேப் வெர்டே அணியின் கோல் போஸ்டை நோக்கி 27 ஷாட்கள் அடித்த நிலையில், அதில் கோலை நோக்கி சென்ற 7 ஷாட்களை கேப் வெர்டே அணியின் கோல் கீப்பர் டெய்லான் லிவ்ரமென்டோ தடுத்துள்ளார்.

ஸ்பெயின் அணி இந்த போட்டியில் 755 வெற்றிகரமான பாஸ்களை செய்து இருந்தாலும், ஒரு கோல் கூட அடிக்க முடியாதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் காஸ்டிலோ (Luis de la Fuente Castillo) கேப் வெர்டே அணியை சிறிய அணி என எடைபோட்டு, காயங்களை தடுக்க தனது முக்கிய அட்டாக்கிங் வீரர்ளை களமிறக்கவில்லை.

இந்த உலகக்கோப்பையில் சிறந்த ஜோடியாக கருதப்படும் லாமின் யமால் (Lamin Yamal) மற்றும் நிகோ வில்லியம்ஸ் (nico willams) ஆகியோரை மாற்றுவீரர்களான அமரவைத்தார். ஸ்பெயின் அணி கோல் அடிக்க திணறிய நிலையில், ஆட்டத்தின் 71 மற்றும் 87 நிமிடத்திலேயே இவர்களை களமிறக்கினார். ஸ்பெயின் அணி இந்த போட்டியில் வெற்றிபெற தவறியதில் அணியின் பயிற்சியாளர் காஸ்டிலோவுக்கும் பெரும்பங்கு உண்டு என்று அந்நாட்டு ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.