சென்னை- மும்பை இடையேயான மோதலில் டாஸ் இழந்த பிறகு ரவீந்திர ஜடேஜாவிடம் ரோஹித் சர்மா வேடிக்கையாக “நீங்க பேட்டிங் பண்றீங்களா?” என்று கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியோ, பங்கேற்ற 6 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
ஒவ்வொரு முறையும் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவதைத் தேர்வு செய்து சேஸிங் செய்வதை வழக்கமாக வைத்துள்ளது. அதேபோல இக்கட்டான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார். டாஸை தாம் தோற்று விட்டதாக உணர்ந்துவிட்டதும் மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா சிஎஸ்கே கேப்டன் ஜடேஜாவிடம் “பேட்டிங் போலா நா து?” (நீங்க பேட்டிங் பண்றீங்களா?) என்று விளையாட்டாக கேட்டது சில வினாடிகள் மைதானத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.