விளையாட்டு

டெஸ்ட் போட்டியை காண ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு

jagadeesh

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை காண அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மேற்குவங்க கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனினும் அதனை மேற்குவங்க கிரிக்கெட் சங்கம் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. 

இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வரும் 22-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனிடையே இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையேயான இருபது ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் நவம்பரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இருஅணிகள் இடையிலான முதல் இருபது ஓவர் போட்டி டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் தொடருக்கா‌ன‌ தங்கள் அணி வீரர்களின் பட்டியலை வங்கதேசம் வெளியிட்டுள்ளது.