விளையாட்டு

“யாரையும் குறை சொல்லும் பழக்கம் எங்களுக்குள் இல்லை” - பும்ரா பேட்டி

“யாரையும் குறை சொல்லும் பழக்கம் எங்களுக்குள் இல்லை” - பும்ரா பேட்டி

webteam

இந்திய அணி விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், வெற்றிக்காக போராடுவோம் என வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பும்ரா, “யாரையும் குறை சொல்லும் பழக்கம் எங்களுக்குள் இல்லை. ஏனென்றால் அனைவருமே போட்டியின் போது கடினமாக உழைப்பை தான் வெளிப்படுத்துவார்கள். விக்கெட்டுகளை எடுப்பதில் பவுலர்களும் சரி, ரன்களை குவிப்பதில் பேட்ஸ்மேன்களும் சரி தீவிர முயற்சியை தான் மேற்கொள்வார்கள்.

நாங்கள் வெற்றியை நெருங்கிக்கொண்டு தான் இருக்கிறோம். அதற்காக கடின உழைப்பையும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். இன்றைய தினம் நிறைய விக்கெட்டுகளை இழந்திருக்கிறோம். இருந்தாலும் யாரையும் குறைகூறிக்கொள்ள மட்டோம். மேலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் முடிவில் இந்திய அணி 90 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் பிருத்வி ஷா மற்றும் மயாங்க் அகர்வால் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் விராட் கோலியும் 14 (30) ரன்களில் வெளியேற, பின்னர் வந்த ரஹானே, உமேஷ் யாதவ் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகினர்.