விளையாட்டு

``இஷான் கிஷான் இந்த இரட்டை சதத்தை சீக்கிரமா மறக்கணும்... அப்போதான் அவரால”- ப்ரெட் லீ

webteam

முன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ப்ரெட் லீ, வருகின்ற 2023 உலக கோப்பவையில் இஷான் கிஷான் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

இளம் ஆட்டநாயகன் இஷான் கிஷான் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் நடந்த வங்கதேசம் - இந்தியாவுக்கு இடையிலான போட்டியில் அட்டகாசமாக விளையாடி இரட்டை சதம் அடித்து இந்திய அணியில் தன்னுடைய இருப்பை தக்கவைத்து கொண்டுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து உலகில் அதிவேக இரட்டை சதம் என்று சாதானையையும் அவர் படைத்திருந்தார்.

இதனால் சச்சின், செவாக், ரோஹித் ஷர்மா வரிசையில் இப்பொழுது இஷான் கிஷானும் இனைந்து உள்ளார். இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் இஷான் கிஷான் பற்றி தற்போது பேசியுள்ளார். அதில் “இதே போல் சிறப்பான ஆட்டத்தை மேலும் இஷாந்த் கிஷன் வெளிப்படுத்த வேண்டும்; அப்பொழுது தான் உலகக்கோப்பையில் அவரால் சிறப்பாக விளையாட முடியும். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் அந்த பரவச நிலையில் மயங்கி கிடக்காமல், அதிலிருந்து முடிந்த வரை சீக்கிரமாக வெளிவந்து அவர் விளையாட்டிலும் உடற்பயிற்ச்சிகளிலும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் அவர் இன்னும் பல சாதனைகள் படைப்பார் என்று நம்புகிறேன். இவர் இதே போல் தொடர்ந்தால் மூன்று சதம்கூட அடிக்கலாம். அவருக்குள் அவ்வளவு திறமை உள்ளது. குறிப்பிட்ட அந்த ஆட்டத்தில் அவர் அடித்த 24 ஃபோர் மற்றும் 10 அபார சிக்ஸர்கள், என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. விராட் கோலி போன்ற மாஸ்டர்கள் அவர் ஆட்டத்திற்க்கு துணை நின்று, அவர் 200-வது ரன்னுக்கு ஓடும் பொழுது அதை உற்சகமாக கொண்டாடியது அழகாக இருந்தது” என்றுள்ளார். இதை அவர் தனது யூட்யூப் சேனலில் கூறியுள்ளார்.

- சுஹைல் பாஷா