பிரபல ஒலிம்பிக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்தோட்ட இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இருவரும் குத்துச்சண்டை போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சர்வதேச குத்துச்சண்டை போட்டி வரும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது.
இதில் கலந்துக் கொள்ள இருக்கும் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மேரிகோமுடன் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டார். இந்த வீடியோ பரவலாக வைரலானது.
இந்நிலையில் லதா ரஜினிகாந்த குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக வீராங்கனை மேரிகோம் கலந்துக் கொண்டார். பின்னர், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்தோட்ட இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, மேரி கோமும் ரஜினியும் குத்துச்சண்டை போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக் பரவி வருகிறது.