விளையாட்டு

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் பட்டம் வென்ற ரோகன் போபண்ணா

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் பட்டம் வென்ற ரோகன் போபண்ணா

webteam

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் கனடாவின் கேப்ரியெல்லா டப்ரவ்ஸ்கி இணை சாம்பியன் பட்டம் வென்றது. 

இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அல் க்ரோயென்ஃபீல்டு மற்றும் கொலம்பியாவின் ராபெர்ட் ஃபெரா இணையை 2-6, 6-2, 12-10 என்ற கணக்கில் போபண்ணா இணை போராடி வென்றது. இந்தியாவின் ரோகன் போபண்ணா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். அதேபோல, கிரான்ட்ஸ்லாம் போட்டிகளின் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனையை டப்ரவ்ஸ்கி படைத்தார். கடந்த 2010ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி வரை முன்னேறிய போபண்ணா இணை, புகழ்பெற்ற பிரையன் சகோதரர்களிடம் தோல்வியைத் தழுவி இருந்தது.