இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது 46-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 1972 ஆம் ஆண்டு பிறந்த சவுரவ் கங்குலி, தொண்ணூறுகளில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். நெருக்கடியான காலகட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று, அணியை சிறப்பாக வழிநடத்தினார். தாதா, பெங்கால் டைகர் என ரசிகர்களால் அழைக்கப்படும் கங்குலிக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கங்குலி பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.