பிரேசில் நாட்டை சேர்ந்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஆண்ட்ரே வெரிசிம்மோ கலந்து கொண்டு விளையாடிய பிரேசில் சூப்பர் பைக் எவலூஷன் ரேஸில் பந்தய கோட்டை கடப்பதற்கு முன்னதாகவே கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் முதலிடத்தை இழந்து மூன்றாவது இடத்தை பிடித்தார்.
அந்த ரேஸில் தான் வெற்றி பெற்றதாக கருதி பந்தய கோட்டை அடைவதற்கு சில மீட்டர் தூரம் மட்டுமே இருந்த நிலையில் பைக்கின் ஃபுட் ரெஸ்டில் பேலன்ஸ் செய்து எழுந்து நின்று வெற்றி கொண்டாட்டத்தில் காற்றில் தன் கைகளை உயர்த்திய இடைவெளியில் அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு போட்டியாளர்கள் ‘வ்ரூம்’ என கடந்து சென்றதால் மூன்றாவது இடத்தை அவர் பிடித்துள்ளார்.
‘இரண்டு வீரர்கள் என்னை கடந்த போது ஆக்சிலேட்டரை திருகினேன். இருப்பினும் மூன்றாவது கியரில் இருந்ததால் வேகம் எடுக்க முடியவில்லை. மீம் க்ரியேட்டர்ஸ்களுக்கு நான் நல்ல கன்டென்ட்’ என அச்சத்துடன் தோல்வி குறித்து அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டமைக்காக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் அவர்.