விளையாட்டு

கேட்ச்சை நழுவவிட்ட புவி: கோபத்தில் பந்தை உதைத்த ரோகித் ஷர்மா!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என வென்றுள்ளது. இந்த தொடரில் மூன்றாவது போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் வீரர் புவனேஷ்வர் குமார் ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார். அதை பார்த்து ஆத்திரமடைந்த கேப்டன் ரோகித் ஷர்மா பந்தை ஃபுட்பால் போல காலால் எட்டி உதைத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பூரன் மற்றும் ரோவ்மேன் பாவெல் (Rovman Powell) ஆகியோர் 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அதனை தகர்க்க இந்திய பவுலர்கள் முயற்சி செய்து வந்தனர். இரண்டாவது இன்னிங்ஸின் 16-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஷார்ட் லென்த் டெலிவரியாக வீசியிருந்தார் புவி. அவர் எதிர்பார்த்தது போலவே ஹிட் செய்தார் பாவெல். ஆனால் அது டாப் எட்ஜானது. அதோடு சில அடி தூரம் பந்து மேல் எழும்பியிருந்தது. நல்ல டைமிங் இருந்ததால் பந்தை புவி கேட்ச் பிடிக்கவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் அதனை நழுவவிட்டார். உடனடியாக கவர் திசையில் நின்று கொண்டிருந்த கேப்டன் ரோகித் ஆத்திரமடைந்து பந்தை எட்டி உதைத்தார். 

 

இருந்தாலும் 19-வது ஓவரை சிறப்பாக வீசி 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழத்தியிருந்தார் புவி. அது இந்திய அணி வெற்றிபெற உதவியது.