தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோவில் வரும் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில், தமிழக வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தகுதி பெறுவது உறுதியாகியுள்ளது.
இதன்மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 8 முறை தேசிய சாம்பியனான பவானிதேவிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார்.