விளையாட்டு

பாராலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கத்தை இழந்த இந்திய ஜோடி

JustinDurai
பாராலிம்பிக் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பலாக் கோலி, பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இன்றுடன் போட்டிகள் நிறைவடையவுள்ள நிலையில், நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி ஆகிய இருவரும் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்க போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்க போட்டியில் பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி ஜோடி ஜப்பானின் பூஹிஹாரா மற்றும் சுகினோ இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் ஜப்பான் ஜோடி 23-21, 21-19 என்ற கணக்கில் வென்றது. அத்துடன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியது.