இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருக்கிறது. இதனால், பெங்களூருவில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரையும் வெல்லும். முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
இந்த போட்டிக்கான இந்தியா, இங்கிலாந்து அணிகளில் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக விமர்சிக்கப்பட்ட மணீஷ் பாண்டேவுக்குப் பதிலாக இளம் வீரர் ரிஷாப் பாண்ட்டுக்கு இந்திய அணியின் ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல லியாம் டாசனுக்குப் பதிலாக பிளங்கட் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.