விளையாட்டு

மருத்துவமனையில் இருந்து கங்குலி டிஸ்சார்ஜ்!

மருத்துவமனையில் இருந்து கங்குலி டிஸ்சார்ஜ்!

jagadeesh

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கடந்த புதன்கிழமை அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் வந்துள்ளார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் கங்குலி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் மேற்கொண்டனர். இந்நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்பு மீண்டும் சவுரவ் கங்குலிக்கு இரண்டாவது முறையாக ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இப்போது சிகிச்சை நிறைவடைந்த நிலையில் கங்குலி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.